"கடந்த 1991-96ம் ஆண்டுகளில் நடந்த ஊழல்களுக்காக போடப்பட்ட வழக்குகளே இன்னும் நீடிக்கிறது. 2001-06ம் ஆண்டுகளில் நடந்தவைகளுக்காக வழக்கு என்றால் அது எப்போது முடியுமோ' என முதல்வர் கருணாநிதி ஆதங்கப்பட்டுள்ளார்.
இது பற்றி, அவர் நேற்று வெளியிட்ட கடிதம்: ஜெயலலிதாவின் 26ம் தேதி அறிக்கையில், 2001-06 ஆட்சியில் ஒரு சிறு தவறு கூட நடைபெறாத தூய்மையான ஆட்சியை நடத்தியதால், தன் மீது பொய் வழக்கு போட கருணாநிதிக்கு ஒன்றுமே கிடைக்கவில்லை என்ற வாசகங்களைப் படித்த போது சிரிப்பை அடக்க முடியவில்லை. ஜெயலலிதாவை முதல்வராக நியமித்தது சட்டப்படி செல்லாது என தாக்கல் செய்த வழக்கில், 2001 செப்., 21 அன்று சுப்ரீம் கோர்ட் நீதிபதி பரூச்சா தலைமையிலான ஐந்து நீதிபதிகள், "தமிழக முதல்வராக ஜெயலலிதா நியமிக்கப்பட்டது செல்லாது. அது அரசியல் சாசனத்திற்கு எதிரானது. இனியும் அவர் முதல்வராக நீடிக்க முடியாது' என தீர்ப்பளித்தனர். அதன் பின்னரே இடைக்கால முதல்வர் பதவி பன்னீருக்கு கிடைத்தது. இதுவும் ஒரு தூய்மையான ஆட்சிக்கு கொடுக்கப்பட்ட சான்றிதழ் தானே?
அவரது ஆட்சியில் நான் உட்பட எங்கள் கட்சியினர் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டோம். அவரது வளர்ப்பு மகன் என கூறப்பட்ட சுதாகரன் கைது செய்யப்பட்டார். தமிழக தணிக்கை துறை அதிகாரி தீத்தன், 2004ல் அரசின் தவறான அணுகுமுறையால், 11 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது என அறிக்கை கொடுத்தார். அதற்காக, அவரை பதவி நீக்கம் செய்ய வழக்கு தொடுத்ததோடு, அவருக்கு எதிராக முழு பக்க விளம்பரங்கள் தரப்பட்டன. அந்த ஜெயலலிதா தான் இப்போது ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில், தணிக்கைத்துறை அதிகாரி கொடுத்த அறிக்கையை, தலையிலே தூக்கி வைத்து ஆடுகிறார்.
முன்னாள் எம்.எல்.ஏ., எம்.கே.பாலன் சென்னையில், 2001 டிச., 30 அன்று கடத்தி செல்லப்பட்டார். பின்னர் கண்டுபிடிக்கப்படவே இல்லை. 2003ல் ஜெயலலிதா அரசு மின் கட்டணங்களை உயர்த்தியது. இலவச மின்சாரத்தை ரத்து செய்தது. கடந்த 2002 மே மாதம் 7ம் தேதி பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதித்து, சட்டசபையில் மசோதா அறிமுகம் செய்யப்பட்டது. 2003 ஜன., 30ம் தேதி அது, அ.தி.மு.க., அரசாலே திரும்ப பெறப்பட்டது. இடையில் என்ன நடந்தது? தூய்மையான ஆட்சிக்கு தான் வெளிச்சம்.
அரசு ஊழியர்கள் நள்ளிரவில் கைது செய்யப்பட்டனர். மதமாற்ற தடைச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இதை போப் ஆண்டவர் கண்டித்தார். இதற்கு ஜெயலலிதா எதிர்ப்பு தெரிவித்தார். இதை கன்னியாகுமரி மாவட்ட கிறிஸ்தவர்கள் சிலர் மறந்து விட்டது ஆச்சரியத்திலும், ஆச்சரியம். ஜெயலலிதா ஒவ்வொரு அறிக்கையிலும், மணல் கொள்ளை, விலை உயர்வு என எழுத தவறுவதில்லை. அவருடைய தூய்மையான ஆட்சியிலே மணல் கொள்ளை பற்றி அப்போது ஒரு வார ஏடு செய்தி வெளியிட்டது. இப்பட்டியலை இத்துடன் நிறுத்துகிறேன். 1991-96ம் ஆண்டுகளில், அவர் ஆட்சியிலே இருந்த போது நடத்திய ஊழல்களுக்காக, போடப்பட்ட வழக்குகளே, சிறப்பு கோர்ட்டுகளில் இன்னும் நீடித்து கொண்டிருக்கையில், 2001-06ம் ஆண்டு நடைபெற்றவைகளுக்காக வழக்கு என்றால், அது எப்போது முடியுமோ? இவ்வாறு முதல்வர் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
Tuesday, December 28, 2010
Monday, December 27, 2010
"'பலமான இதயம் உள்ளவர்களுக்கு மட்டும்!'"
அடல்ஸ் ஒன்லி படங்களை 18 வயதுக்கு கீழே உள்ளவர்கள் பார்க்க முடியாது, பார்க்கக் கூடாது. அது போலதான் இந்தச் செய்தியும்! பங்குச்சந்தை மற்றும் ரியல் எஸ்டேட்டில் அதிகமாக முதலீடு செய்திருப்பவர்கள், வயதானவர்கள், இதயத்தில் பிரச்னை இருப்பவர்கள் இந்தக் கட்டுரையை படிக்காமல் இருப்பது நலம். அல்லது குறைந்தபட்சம் கொஞ்சம் முன் தயாரிப்புகளோடு படிக்கவும்!
அமெரிக்காவில் பிறந்த ஜெரால்ட், 'தி டிரெண்ட்ஸ் ரிசர்ச் இன்ஸ்டிடியூட்’ என்ற நிறுவனத்தின் நிறுவனராகவும் இயக்குநராகவும் இருக்கிறார். அவ்வப்போது நம்மூர் சாமியார்கள் மாதிரி ஆருடங்களை அள்ளிவிடுவார்... கிட்டத்தட்ட யாகவா முனிவர் மாதிரிதான்! 'இனி தங்கம்தான் தங்கும்; தானியம் தங்காது’ என்று யாகவா எடுத்துவிடுவதைப் போல எடுத்துவிடுவார்... ஜெரால்டு சொல்வது ஒவ்வொன்றும் அதிர்ச்சி ரகமாகத்தான் இருக்கும். அவர் ஏதாவது சொல்லாமல் இருந்தால் அதுவே நல்லது என்று பிரார்த்திப்பவர்கள் நிறைய பேர்! அந்த அளவுக்கு மனுஷனுக்கு கருநாக்கு! அந்த நாக்கு சுழன்று சொற்களை வீசினால் திராவகம் தெளித்த கதிதான்!
மேலும் அவர், ''கடந்த 30 வருடங்களில் பணக்காரர்களுக்கும் மிடில் கிளாஸ் மக்களுக்கும் உள்ள இடைவெளி அதிகரித்து கொண்டே வந்திருக்கிறது. எண்ணிக்கையில் அதிகமாக இருக்கும் இந்த மிடில் கிளாஸ் மக்கள்தான் நாட்டில் நடக்கும் புரட்சிக்கு வினைஊக்கியாக இருப்பார்கள். அப்படி நடக்கும்பட்சத்தில் வால் ஸ்டீரிட்டில் என்ன நடக்கும் என்பது பற்றிச் சொல்லத் தேவையே இல்லை.
இதற்கு தூபம் போடுவது போல அமெரிக்காவின் முக்கிய பத்திரிகைகளான நியூயார்க் டைம்ஸ், வால்ஸ்டீரிட் ஜர்னல், சி.ன்.பி.சி., யு.எஸ்.ஏ. டுடே போன்றவை ஜெரால்டுக்கு சாதகமாகவே எழுதி இருக்கின்றன. இதற்கு ஒரு படி மேலே போய், 'நாஸ்டர்டாம்ஸ் இருந்தால் அவர் ஜெரால்டுடன் போட்டி போடுவது கஷ்டம்தான்’ என்று எழுதி இருக்கிறது நியூயார்க் போஸ்ட்.
தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனைமரத்தில் நெரி கட்டும் காலம் இது. அமெரிக்க மார்க்கெட் டல்லடித்தால் உடனே நம்மூர் மார்க்கெட் படுத்தே விடும். இந்நிலையில் ஜெரால்டு சொன்ன விஷயங்கள் எல்லாம் நடந்தால், நம் சந்தை என்ன ஆகும் என்பதைச் சொல்லத் தேவையே இல்லை. கடவுளிடமோ அல்லது இயற்கையிடமோ பிரார்த்திக்கும் போது இனி அமெரிக்காவும் நல்லா இருக்கணும் என்று வேண்டிக்கொள்ளலாம். நம்மால் முடிந்தது அதுதான்!
Friday, November 26, 2010
ஸ்பெக்ட்ரம் ஊழலை நியாயப்படுத்தும் கருங்காலிகள்.
“ ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ஆ.ராசாவுக்கு ஆதரவாகத் 'தமிழ் ஊடகப் பேரவை’ என்ற அமைப்பு களம் இறங்கி உள்ளது. இதன் துவக்கமாக(?) 'ஆ.ராசா மீது சில ஊடகங்களின் வேட்டை ஏன்?’ என்ற தலைப்பில் கடந்த 24-ம் தேதி சென்னை தியாகராயர் அரங்கில் ஒரு கூட்டம் நடந்தது. திராவிடக் கழகத் தலைவர் கி.வீரமணி, திராவிட இயக்கத் தமிழர் பேரவை சுப.வீரபாண்டியன் உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்துகொண்டனர்.
பேராசிரியர் சுப.வீரபாண்டியன் பேசும்போது பத்திரிகைகளைக் கடுமையாகப் பிடித்தார். ''மக்களுக்கு நன்மை தரக்கூடிய, பயன் தரக்கூடிய எந்த விஷயத்திலும் நட்டக் கணக்கைப் பார்க்கக் கூடாது. கடும் இழப்புகளுக்கு இடையிலும் பேருந்துகளுக்கு பெட்ரோல், டீசல், ஒரு ரூபாய் அரிசி இதெல்லாம் அரசாங்கம் எதற்காகச் செய்கிறது? அதேபோலத்தான் தகவல் தொடர்பும் மக்களுக்குப் பரவலாகச் சென்றடைய வேண்டும் என்ற நல்லெண்ணத்தில், சில குறிப்பிட்ட முதலைகளின் கைகளுக்கு ஸ்பெக்ட்ரம் போகாமல் ஆ.ராசா தடுத்து, பரவலாகப் பலரின் கைகளுக்குக் கொடுத்தார்.

1.76 லட்சம் கோடியை ஆ.ராசா எந்தப் பெட்டியில் எடுத்துக்கொண்டு போனார்... காட்டுங்கள் பார்க்கலாம்!
'தி.மு.க-வுக்கு அழியாத கறுப்பு அடையாளத்தை ஆ.ராசா தேடித் தந்துவிட்டார்’ என்று ஒரு பத்திரிகையில் எழுதினார்கள். அவர்களுக்கு கறுப்பு என்றாலே பிடிக் காது. ராசாவும் கறுப்பாகத்தானே இருக்கிறார். 'போ ராசா’ என்று ஒரு பத்திரிகை எழுதுகிறது. ஆனால், மக்கள் 'வா ராசா!' என்று அவரை அள்ளி அணைத்துக் கொண்டார்கள். 'ஆ.ராசாவை கொல்ல சதி நடக்கிறது’ என்று ஒரு பத்திரிகையில் சு.சுவாமி பேட்டி தந்துள்ளார். அது எப்படி அவருக்குத் தெரியும்? ஆக, அந்தக் கொலை திட்டக்காரர்களோடு அவருக்கு என்ன தொடர்பு என்பதை விசாரித்துக் கைது செய்ய வேண்டும்...'' என்று காட்டமாகப் பேசினார்.
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, ''இரண்டாம் அசோகரான மானமிகு தலைவர் கலைஞர் அவர்களின் தலைமையில் நடந்துகொண்டு இருக்கும் நல்லாட்சியை வீழ்த்துவதற்கு சில சக்திகள் சதிவலை செய்கின்றன. அதற்கான முன்னோட்டம்தான் ஆ.ராசா விவகாரம். திடீரென எங்கிருந்தோ கிடைத்த ஆடிட்டர் ஜெனரல் அறிக்கையை கையில் வைத்துக்கொண்டு, ஊதி ஊதி முடியைச் சுட்டுக் கரியாக்க முயல்கிறார்கள். அனுமானத்தில் கணக்குப் போட்டுக் கொடுக்கப்பட்ட கற்பனை ஆராய்ச்சி அறிக்கைதான் அது!'' என்று எல்லாம் பேசியவர், கடந்த ஜூ.வி. இதழைக் கையில் எடுத்துக் கொண்டு மீண்டும் காரசாரமானார்.
''இந்த இதழ் ஜூ.வி-யில் ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை வெளிக்கொண்டு வந்த இரண்டு சிங்கங்களைப்பற்றி தமிழர்கள் அறிந்தாக வேண்டும் என்று டெல்லி நிருபர் எழுதி இருக்கிறார். எந்தத் தமிழன் கேட்டான்? செய்தியின் இறுதியில் 'பொதுமக்கள், பத்திரிகைகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேட்டுக்கொண்டதால்தான் ஸ்பெக்ட்ரம் விசாரணையைத் தொடங்கினோம்’ என ஆடிட்டர் ஜெனரல் ஆர்.பி. சிங் பேட்டி கொடுத்து இருக்கிறார். யார் அந்த பொதுமக்கள்னு எனக்குக் காட்டுங்க?'' என்று சூடாகக் கேட்டார் கி.வீரமணி. “
பண்ணாட பரதேசிகளா, எவன் ஊட்டு சொத்த எவன் அழிச்சிட்டு போறது ? இப்படி பேசுறதுக்கு எவ்ளோ துட்டு வாங்குன ? உன்னலாம் நிக்க வெச்சே கொல்ல வேணுண்டா. என்ன பண்றது, மும்பை கொலைகாரன் கசாப்புக்கே இன்னும் சலாம் போட்டுக்கொண்டு கோடி கணக்கில் செலவு பண்றோம், அப்புறம் ஏன் இந்த பரதேசிங்க இப்படி பேச மாட்டானுங்க ? என்ன பண்ணி தொலையரது, நொந்து கொள்வதை தவிர ?

Thursday, November 25, 2010
ஸ்பெக்ட்ரம் ஊழல்
இந்திய அளவில் மிகப்பெரிய ஊழல் நடந்தும், எதிர்கட்சிகள் நாடாளுமன்றத்தை நடத்த விடாமல் செய்த பின்பும், உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்த பின்பும் ஒன்றும் நடவாத மாதிரி நடந்துகொள்ளும் பிரதமரையும், காங்கிரஸ் கட்சியையும், அதன் தலைவரையும் என்னவென சொல்வது ? தன் கட்சி அமைச்சர் தவறு செய்தார் என தெரிந்த பின்னரும், அவரை காப்பாற்றுவது போல் அறிக்கைவிடும் கட்சித்தலைவர்கள் இருக்கும் வரை தமிழகத்தையும், இந்தியாவையும் யாரும் காப்பாற்ற முடியாது. அரியலூர் ரயில் விபத்திற்கு பொறுப்பேற்று ராஜினாமா செய்த லால் பகதூர் சாஸ்திரி, கடைசிவரை தனக்காக வாழாமல் பிறற்காக வாழ்ந்த பெரியார், காமராஜர், கக்கன் வாழ்ந்த பூமியில் இது போன்ற பிறவிகளும் வாழ்கின்றனவே ?
அமைச்சர்களுக்கு எல்லாம் தலைவராகவே, பிரதம அமைச்சர் நியமிக்கப்படுகிறார். எதையும் தட்டிக் கேட்க முடியாமல் பதவியில் ஏன் இவர் ஒட்டிக்கொண்டிருக்கிறார் என தெரியவில்லை. சமீபத்தில் சோனியாகாந்தி பிரதமரின் நேர்மையை குற்றம் சொல்பவர்களுக்கு தானே தீது வந்து சேரும் என்கிறார். அவரின் நேர்மையை யாரும் குற்றம் சொல்லவில்லை. ஆனால் மற்ற அமைச்சர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைக்கூட கண்காணிக்க முடியவில்லை என்றால், தட்டிக்கேட்க முடியவில்லை என்றால் நேர்மையாக இருந்து என்ன பயன் ?

Subscribe to:
Posts (Atom)