Tuesday, December 28, 2010

அ.தி.மு.க., ஆட்சியின் மீது வழக்குகள் போடாதது ஏன்?

"கடந்த 1991-96ம் ஆண்டுகளில் நடந்த ஊழல்களுக்காக போடப்பட்ட வழக்குகளே இன்னும் நீடிக்கிறது. 2001-06ம் ஆண்டுகளில் நடந்தவைகளுக்காக வழக்கு என்றால் அது எப்போது முடியுமோ' என முதல்வர் கருணாநிதி ஆதங்கப்பட்டுள்ளார்.

இது பற்றி, அவர் நேற்று வெளியிட்ட கடிதம்: ஜெயலலிதாவின் 26ம் தேதி அறிக்கையில், 2001-06 ஆட்சியில் ஒரு சிறு தவறு கூட நடைபெறாத தூய்மையான ஆட்சியை நடத்தியதால், தன் மீது பொய் வழக்கு போட கருணாநிதிக்கு ஒன்றுமே கிடைக்கவில்லை என்ற வாசகங்களைப் படித்த போது சிரிப்பை அடக்க முடியவில்லை. ஜெயலலிதாவை முதல்வராக நியமித்தது சட்டப்படி செல்லாது என தாக்கல் செய்த வழக்கில், 2001 செப்., 21 அன்று சுப்ரீம் கோர்ட் நீதிபதி பரூச்சா தலைமையிலான ஐந்து நீதிபதிகள், "தமிழக முதல்வராக ஜெயலலிதா நியமிக்கப்பட்டது செல்லாது. அது அரசியல் சாசனத்திற்கு எதிரானது. இனியும் அவர் முதல்வராக நீடிக்க முடியாது' என தீர்ப்பளித்தனர். அதன் பின்னரே இடைக்கால முதல்வர் பதவி பன்னீருக்கு கிடைத்தது. இதுவும் ஒரு தூய்மையான ஆட்சிக்கு கொடுக்கப்பட்ட சான்றிதழ் தானே?

அவரது ஆட்சியில் நான் உட்பட எங்கள் கட்சியினர் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டோம். அவரது வளர்ப்பு மகன் என கூறப்பட்ட சுதாகரன் கைது செய்யப்பட்டார். தமிழக தணிக்கை துறை அதிகாரி தீத்தன், 2004ல் அரசின் தவறான அணுகுமுறையால், 11 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது என அறிக்கை கொடுத்தார். அதற்காக, அவரை பதவி நீக்கம் செய்ய வழக்கு தொடுத்ததோடு, அவருக்கு எதிராக முழு பக்க விளம்பரங்கள் தரப்பட்டன. அந்த ஜெயலலிதா தான் இப்போது ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில், தணிக்கைத்துறை அதிகாரி கொடுத்த அறிக்கையை, தலையிலே தூக்கி வைத்து ஆடுகிறார்.

முன்னாள் எம்.எல்.ஏ., எம்.கே.பாலன் சென்னையில், 2001 டிச., 30 அன்று கடத்தி செல்லப்பட்டார். பின்னர் கண்டுபிடிக்கப்படவே இல்லை. 2003ல் ஜெயலலிதா அரசு மின் கட்டணங்களை உயர்த்தியது. இலவச மின்சாரத்தை ரத்து செய்தது. கடந்த 2002 மே மாதம் 7ம் தேதி பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதித்து, சட்டசபையில் மசோதா அறிமுகம் செய்யப்பட்டது. 2003 ஜன., 30ம் தேதி அது, அ.தி.மு.க., அரசாலே திரும்ப பெறப்பட்டது. இடையில் என்ன நடந்தது? தூய்மையான ஆட்சிக்கு தான் வெளிச்சம்.

அரசு ஊழியர்கள் நள்ளிரவில் கைது செய்யப்பட்டனர். மதமாற்ற தடைச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இதை போப் ஆண்டவர் கண்டித்தார். இதற்கு ஜெயலலிதா எதிர்ப்பு தெரிவித்தார். இதை கன்னியாகுமரி மாவட்ட கிறிஸ்தவர்கள் சிலர் மறந்து விட்டது ஆச்சரியத்திலும், ஆச்சரியம். ஜெயலலிதா ஒவ்வொரு அறிக்கையிலும், மணல் கொள்ளை, விலை உயர்வு என எழுத தவறுவதில்லை. அவருடைய தூய்மையான ஆட்சியிலே மணல் கொள்ளை பற்றி அப்போது ஒரு வார ஏடு செய்தி வெளியிட்டது. இப்பட்டியலை இத்துடன் நிறுத்துகிறேன். 1991-96ம் ஆண்டுகளில், அவர் ஆட்சியிலே இருந்த போது நடத்திய ஊழல்களுக்காக, போடப்பட்ட வழக்குகளே, சிறப்பு கோர்ட்டுகளில் இன்னும் நீடித்து கொண்டிருக்கையில், 2001-06ம் ஆண்டு நடைபெற்றவைகளுக்காக வழக்கு என்றால், அது எப்போது முடியுமோ? இவ்வாறு முதல்வர் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. செருப்பால அடி நாயே. இன்னும் வழக்கே போடலியா ? அவ தப்பு பண்ணியிருந்தா வழக்கு போட்டு தண்டணை வாங்கி கொடுக்க வேண்டியது தானே ? அத உட்டுட்டு, நேரமாவுது காலமாவுதுனு ஏன் கத்தற ? ஏன் இப்போ நீ அந்தம்மா பண்ண தப்ப கண்டுக்கலனா, அவங்க ஆட்சியில உன் தப்ப கண்டுக்க மாட்டாங்க-னு ஒரு நெனப்பு. இதே மாதிரி பேசிக்கிட்டிருந்த சீக்கிரம் காணாம போய்டுவ. ஒழுங்கு மரியாதையா வேலைய பாரு.

    ReplyDelete